|
நிர்வாகக் குழு | ||||||||||
|
அனுராக் டோட்
முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் மென்பொருள் பொறியாளராக பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள இவர் இரண்டு வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்களைத் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவர் வைஸ்நட் தேடல் பொறி என்னும் நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக பணியாற்றிய பொழுது, அதன் தேடல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 2002-ல் வைஸ்நட்டை லுக்ஸ்மார்ட் என்ற நிறுவனம் கையகப்படுத்திக்கொண்டது. மேலும் ஈ-பே, சினாப்சிஸ் மற்றும் டெல்சாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். அனுராக் ஐ.ஐ.டி தில்லியில் மின்பொறியியல் துறையில் பி.டெக் பட்டமும் ஆன் ஆர்போரில் உள்ள மிசிகன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். ஐஐடி தில்லியில் கல்வி கற்ற பொழுது கோடைக்கால இளநிலைப் பட்டதாரிக்கான ஆராய்ச்சி விருதினைப் பெற்றுள்ளார். |